அன்புள்ள உனக்கு…

உனக்கு என் மேல் என்ன  
இத்தனைக் காதல்?
ஏதோ ஒரு தெருக்கடையில்
ஏதோ ஒரு நெருக்கடியில்
என்னைச் சந்தித்திருப்பாய்
சில நாழிகையில் உன்னை நான்                                                                                               இவ்வளவு ஆகர்ஷித்தேனா?                                                                                                 இம்மியளவும் புரியவில்லை                                                                                                           என்னை ஏன் தேர்ந்தெடுத்தாயென்று? 
அருகில் வந்தாய்                                                                                                                    உயிர்வளியில் கலந்தாய்                                                                                                                        என் இதழை வருடினாய்                                                                                                                           என் கண்களில் நீராடினாய்
என் நாடிகள் மேல் ஏறி                                                                                                      உடலெங்கும் உலா வந்தாய்                                                                                                               கழுத்தை முற்றுகையிட்டு
தங்கினாய்  நான் விழுங்காது உறைந்து போனேன் நீ மெல்ல என்னை விழுங்கினாய்
என் சுவாசத்தில் வசித்தாய்                                                                                                                      பல பிறவிகள் எடுத்தாய்                                                                                                          அத்தனையும் என்னைக் காதலிக்கவா?                                                                                   வெப்பத்தில் நான்!                                                                                                          கொண்டாட்டத்தில் நீ!-என்
உடலை உருக்கினாய் 
உள்நெஞ்சில் மையமானாய்
உச்சியில் சுமையானாய்
சிந்தனையில் சிதறி
சிலிர்க்க வைத்தாய்

உன் காதல் தந்த வலியால் 
கண் சிவந்தேன்
குரல் ஒடிந்தேன்
வலு இழந்தேன் 
நடுங்கி நின்றேன் 
உன் காதல் இடருக்கு 
விடைத் தேடினேன் 
குறுகியது தீர்வுகள்
குறையாதது உன் ஆட்டங்கள்
பகலில் என்னைப் பற்றிக்கொண்டாய் 
இரவிலும் ஏன் இம்சித்தாய்?
என் ஒவ்வொரு அணுவிலும் நீ!
உன் அனைத்து அனுபவங்களிலும் நான்!
நீ ஊடுருவி ஆனது வாரங்கள் 
என் மனதில் நீங்காத பாரங்கள்
உன்னை மெல்ல புரிந்தேன் 
உன்னோடு வாழப் பழகினேன்
நம் காதல் உனக்கு சலித்து போனது  
புதிய காதலோ? மோகமோ?
நீ மெதுமெதுவாய் என்னைப் பிரிந்தாய்
நீங்கா நினைவுப்பரிசொன்று அளித்து!
பெறுநர்
H1N1(Play girl variant)
என்றும் இருமலுடன்
வசந்த் சுகுமார்

​”A toast to all the tiny viruses—past, present, and perpetual. They just obeyed nature’s code of survival without choice or malice, unlike humans who always had a choice and yet chose the terrifying one to survive.”

Image Courtesy- Gemini

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

2 thoughts on “அன்புள்ள உனக்கு…

Leave a comment