சமூகம் கட்டியது நூலொன்று
சமமாய் இறுக்கியதென் கைகால்களை
எகிறியும் ஏங்கியும் பார்த்தேன்!
திமிறியும் துள்ளியும் சோர்ந்தேன்!
அகம் மறைக்க பழகினேன் அழகு பொம்மையாய் ஆடினேன்
விதம்நூறு அழகு ஆடையாம்
வாழ்வொரு நாடக மேடையாம்
காலம்மாற வெவ்வேறு கதாப்பாத்திரம் – நான்
காலப்போக்கில் மெருகேறிய முழு எந்திரம்
கைக்கொட்டி சிரித்தார் பலர்
கரமிணைத்து நெகிழ்ந்தார் சிலர்
மர பொம்மைக்கு இங்கேது உணர்வு
மனதின் வெம்மைக்கு இல்லையிங்கு பகிர்வு!
மரபுவழி கலை காத்தல் உலக நியதியோ
மரபிலூறும் இந்த வாழ்முறை தலை விதியோ?
சற்றே நூலவிழ்த்து வேடம் கலைத்து
சாகசமின்றி சாமானியனாய் உயிர்த்து
இயல்பாய் வாழ ஒரு நாள் வருமா? போதுமா?
பழுதடைந்து பயன்முடிந்த பொம்மையென மனம் தளர்ந்து மெய் தொய்ந்து
மௌனமாய் ஆட்டம் முடியுமோ? அடங்குமோ?
வசந்த் சுகுமார்

👌👌பொம்மைக்கு இங்கேது உணர்வு
அருமையான வரிகள்.
LikeLike
அருமையான பகிர்வு சார்
LikeLike