வீரமகளின் வீரமரணம்

பிறப்பொன்று எதற்கு இந்நாட்டில் பெண்ணாய் பிறப்பொன்று எதற்கு?

கல்வி எத்தனை தந்துவிட முடியும்? கள்வனிடமிருந்து என்னை மீட்குமோ?

நாற்பண்புகளையும் நல்கினாள் என் அன்னை, நற்பண்புகளை கயவனுக்கு யார் நல்குவரோ?

கற்பொழுக்கம் காத்து நின்றேன் என்னை காக்குமென்று மூடராயானேனோ!

வீரப் பயிற்சிகள் பெற்றேன் பெண்பிணத்தையும் தின்னும் பேடிகளிடம் போரிட்டுத் தோற்கவோ?

குலதெய்வம், காவல்தெய்வம் வேண்டி விழுந்தேன், ஒரு தெய்வமும் இன்றெழவில்லையே

துகிலிழந்து தவழ்ந்தேன்! கைநடுங்கி உடுக்கை தீர்ந்து கண்ணன் எதிர்நின்றான், எத்தனை திரௌபதிகளுக்கு ஆடை அளித்தானோ?

பேதையையும் சிதைக்கிறான் பேரிளம்பெண்ணையும் வதைக்கிறான், இவனை கருவில் வதைக்கும் சக்தியொன்று எனக்களிப்பாயா?

கர்மம் என்று சொன்னால் பின் தர்மம் யாதென கேட்பேன்

மிருகமுமிங்கு அறமறிந்து, மனிதம் அழிந்தொழிய, கலியுகதர்மம் என் சிற்றறிவுக்கெட்டவில்லையே?

பெண்ணை மதிக்க தவறிய நொடி, நீ ஆண் என்ற தகுதி இழந்தாய்

காக்கும் ஆண் அல்ல நீ ,அழிக்கும் பேடியடா நீ

நூற்றாண்டு சுதந்திரம் வேண்டாம், மடிந்த மங்கைகளுக்கு ஒரே நீதி வேண்டும்!

பெண்தெய்வத்தை உலகிற்கு அழைக்கிறேன், மீண்டும் வா கண்ணகி! இம்முறை எனக்காக!

மெழுகொளியாய் அல்ல, அழியா நெருப்பாய்! அடங்கா ஆளுமையாய்!

இச்சைக்காரர்களின் தலையறுக்க! அவனுடல் முழுதும் சதையறுக்க! துகளாய் நொறுக்கி வதை செய்ய!

ஆண் இனத்தை எரித்திடு! எந்தையை வழியின்றி பலி கொடுக்கிறேன்!

எஞ்சிய பெண்கள் ஒரு முறையாவது வாழட்டும்….! எஞ்சிய பெண்கள் ஒரு முறையாவது வாழட்டும்….!

எனது கடைசி யுத்தம் உலகறியாது எனினும் வீரமரணமென அறிவியுங்கள்!

நாடெங்கும் ஒலிக்கட்டும்! வீரமகளின் வீரமரணம் !

வசந்த் சுகுமார்

It’s not a poem…No, nothing impressive here..Just my anger outbreak and heartfelt words for the kolkata girl. It should be the voice of that angel. As parents, let’s teach our sons to respect and protect women and mould our daughters to become bold, resilient and independent. Let the flag fly high on a real Independence Day. Let’s fight till then….

# Justice for the angel # # Respect and Protect Women #


Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

One thought on “வீரமகளின் வீரமரணம்

Leave a reply to Dr Vidhya Rajan Cancel reply