கோவிட்…இரண்டாவது அலை….. வாசிக்கும் செய்திகள், செய்தியில் காணும் காட்சிகள், நண்பர்கள், உற்றார், உறவினரின் தொலைபேசி அழைப்புகள், இவை அனைத்தையும் கேட்டு மனம் குழைகிறது. மனித வாழ்கையை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த நுண்ணுயிரி. என் மனதின் குமுறல்கள் இங்கே…
நுண்ணுயிரியும் நானும்
காற்றில்லை…
கண்ணீர் உண்டு !
மருந்தில்லை….
மன்றாடல் உண்டு!
மருத்துவப் படுக்கை இல்லை…
மரணப்படுக்கை உண்டு!
இயல்நிலை இல்லை….
இறுக்கம் உண்டு!
அகக்கண் இல்லை…
முகக்கவசம் உண்டு!
இரவு நிச்சயமில்லை….
இடைவெளி உண்டு!
உறவுகள் இல்லை…
ஊரடங்கு உண்டு!
சுவை நாடி இல்லை…
சுடுகாட்டு வாசம் உண்டு!
அடுப்பெரிவதில்லை….
தடுப்பூசி உண்டு!
இயற்கை நேசம் இல்லை…
செயற்கை சுவாசம் உண்டு!
சாமானியனுக்கு வாழ்வாதாரம் இல்லை….
சந்தர்ப்பவாதிக்கு பொருளாதாரம் உண்டு!
திணறலுக்கு விடிவு இல்லை…
தேர்தலுக்கு முடிவு உண்டு!
சவங்களுக்கு பெட்டி இல்லை…
சிம்மாசனத்துக்கு போட்டி உண்டு!
உத்தமம் இல்லை…
மெத்தனம் உண்டு!
உணர்வுகளை புதைக்க கதி இல்லை….
உடல்களை எரிக்க விதி உண்டு!
மனிதம் உண்டோ ?
மகத்துவமும் உண்டோ ?
வசந்த் சுகுமார்

அருமை வசந்த் வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person
Superb vasanth… feeling proud about you
LikeLiked by 1 person
“முப்பரிமாண மெய்ப்பொருள்”
கவியின் கவின் எண்ணி உள்ளம் மகிழவா?
கவிதையின் கருப்பொருள் உணர்ந்து மெய்மறக்கவா?
புவியின் நிலைமாறி மனிதம் துளிர்க்க வேண்டிக்கொள்ளவா?
செவியில் தித்திக்கும் இக்கவிதைபோல் மற்றொன்று விரைவில் கிட்டுவிடாதா?😃
LikeLike
கிட்டிவிடாதா? *
LikeLike
தங்கள் கருத்துக்களே அழகிய கவிதையாய் பதிவாகி உள்ளது. என் அகம் மகிழ்ந்து நிறைந்தது. மிக்க நன்றி..
LikeLike
எதார்த்தமன வரிகள், ஏனோ நாம் உண்மையில் இருந்து மிகவும் விலகிச்சென்று விட்டோமோ என்ற வருத்தத்த்தை அழகாக கவிதையாக்கி உள்ளீர்கள், தொடருட்டும்…
LikeLike