பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சராசரி நாள், நண்பர்கள் நாங்கள் மூவரும் திருச்சியில் சந்தித்தோம். 11ஆம் வகுப்பு, படிப்பு சுமை குறைவு; மாலை வேலைகளில் இவ்வாறு சந்திப்பது வழக்கம். “கோவிலுக்கு போய் வந்தாச்சு, கொஞ்ம் தீனி கொறித்து அளவில்லா அரட்டையும் அடிச்சாச்சு! சரிடா.. எல்லாம் கிளம்புவோமா!” என்று விடை பெற..நாங்கள் நடந்து வந்த பாதையில் என் நண்பன் ஶ்ரீராம் காலில் தட்டியது ஒரு பொருள். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அது என்னவென்று அறிய மூவருக்கும் ஆர்வம்.Continue reading “முதல் மைல்கல்”
