வரம்

ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்காக திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்ல அம்மா, அண்ணணுடன் நான் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். பள்ளிக் காலத்தில் பேருந்து பயணம் என்றாலே அத்தனை சிறப்பு. அன்று ஒருபுறம், அமைச்சர்கள் கட்சி பதவிகள் அறிவிப்பிற்காக பித்துப்பிடித்த நிலையில் காத்திருப்பது போல நான் ஜன்னல் ஓர இருக்கைக்காக காத்திருக்க.. மறுபுறம், உப்பும் மிளகாய் பொடியும் தூவிய வெள்ளரிக்காய்! காகிதக் கூம்பு பொட்டலத்தில் கைகளுக்கு இதமான சூட்டுடன் கிடைக்கும் கடலை! , மணப்பாறை முறுக்கு!..இவைContinue reading “வரம்”

முதல் மைல்கல்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சராசரி நாள், நண்பர்கள் நாங்கள் மூவரும் திருச்சியில் சந்தித்தோம். 11ஆம் வகுப்பு, படிப்பு சுமை குறைவு; மாலை வேலைகளில் இவ்வாறு சந்திப்பது வழக்கம். “கோவிலுக்கு போய் வந்தாச்சு, கொஞ்ம் தீனி கொறித்து அளவில்லா அரட்டையும் அடிச்சாச்சு! சரிடா.. எல்லாம் கிளம்புவோமா!” என்று விடை பெற..நாங்கள் நடந்து வந்த பாதையில் என் நண்பன் ஶ்ரீராம் காலில் தட்டியது ஒரு பொருள். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அது என்னவென்று அறிய மூவருக்கும் ஆர்வம்.Continue reading “முதல் மைல்கல்”