போர்க்காயம் கண்ட மி்குவீரன் பேரிடரில் அறுவை மேடையில் குருதி தழுவிய தேகமது இறுதி நெருங்கிய சுவாசமிது – அங்கே மருத்துவன் முகக்கவசம் அணிந்து அகக்கண் தெளிந்து உயிர்வளி நூறுவீதம் கொடுத்து ஊசியால் நாளம் துளைத்து செந்நீரில் மயக்கமருந்தேற்றி செவ்வனே வீரனின் வலியாற்ற இவன் வசத்தில் அவன் சுவாசம் இவன் கட்டுக்குள் அவன் அங்கம் சதையறுக்கும் சிகிச்சையினால் சேதங்கள் வலுவாகினதால் இழையங்கள் இனி இழப்பதற்கொன்றுமில்லை இருந்துமிவன் இயங்கியலை காக்க மறுக்கவில்லை நாளம் வழி திரவங்கள் காலமின்றி விரையுமிவன் கரங்கள்Continue reading “மறுமையோ! மாயையோ!”
Author Archives: vasanth sukumar
தினக்கூலி
கருவறையில் ஒலித்தது ‘உழைத்திடு!’ (உழைத்திடு!) கடினமாக..கல்வியினும் சிறந்ததாம் உறக்கம் தொலைத்து..ஊர் நல்லவனென்று பேசுமாம் ஆசைகளை துறந்து..அழியாப் புகழ் சூழுமாம் அனைத்துறவுகளையும் மறந்து..அன்பொன்றும் அவசியமில்லையாம் அந்நிய தேசம் சென்று..அமுதும் விலைக்கு கிடைக்குமாம் மற்றவர் பயனுக்கு..மடமை உன் பிறப்புரிமையாம் (உழைத்திடு!) பசி பிணியோடு..பாதகனும் உனக்குதவுவானாம் ஒடுங்கிப் போனாலும்..ஓராண்டிற்கு ஒரு தினம் உன்னைக்கொண்டாடுவார்களாம் கடைமூச்சு வரை..காவல்தெய்வம் உன் குடும்பம் காக்குமாம் முதுகெலும்பாய் தேசத்திற்கு..மடிந்த நொடி உன்னை மறந்தே போவார்களாம்! கல்லறையில் ஒலித்தது ‘உழைத்திடு!’ வசந்த் சுகுமார். Everday’s sunset with aContinue reading “தினக்கூலி”
மரத்துப் போன மனிதம்!
வாட்ஸ்அப்பில் வாழ்த்துக்கள்- அன்பு முகநூலில் முத்த பரிமாற்றம் – காதல் ஆன்லைனில் அழைப்பிதழும் அனுதாபமும் – மரியாதை டிண்டரில் டஜன் காதல் –காவியம் யூடியூபில் யுத்தம் – புரட்சி ட்விட்டரில் டாம்பீகம் – பெருமை வீடியோகாலில் வாழ்க்கை – குடும்பம் ஸ்டேட்டஸ்ஸில் சாமி தரிசனம் – பக்தி இன்ஸ்டாவில் இழவு தகவல் – துக்கம் மெயிலில் மாபெரும் வெற்றி பகிர்வுகள் – மகிழ்ச்சி கூகுளில் குறைதீர்ப்பு – பகுத்தறிவு செல்போனில் செல்லரிக்கும் சரணடைவு – வாழ்க்கை மரத்துப்போனContinue reading “மரத்துப் போன மனிதம்!”
தீது போய் நன்று வா! – உக்ரைனிலிருந்து மைத்ரேயி
பிப்ரவரி 24 , 2022 உக்ரைன் தலைநகர் கீவ், விடியற்காலை நாலு மணி இருபத்தைந்து நிமிடங்கள், மைத்ரேயியின் ஆழ்ந்த தூக்கம் நொடியில் கலைந்து , கட்டிலில் இருந்து கீழே தள்ளப்பட்டாள். அவள் அறையில் தன் வாழ்நாளில் இதுவரை காணாத அதிர்வையும், கேளாத உரத்த சத்தத்தையும் கேட்டு மிரண்டு போனாள் மைத்ரேயி. “இட்ஸ் என் எர்த் குவேக்!!!”என்று அவள் கட்டிலிற்கு அடியில் புகுந்து கொள்ள முயன்ற போது அறைக் கதவை உதைத்து உள்ளே பாய்ந்தாள் ஜெசி! “ ரஷ்யாContinue reading “தீது போய் நன்று வா! – உக்ரைனிலிருந்து மைத்ரேயி”
யார் அவள்?!
“கருவறை ஒளி பெற்றது கள்ளிப்பால் கலங்கியது நிலம் நலமானது ஞாயிறு குளிர்ந்தது அம்புலி ஆனந்தம் கொண்டது விண்மீன்கள் வெறியாட்டம் போட்டன மழலை அவளிடம் குழைந்தது அவள் மதிப்பெண் குவிந்தது கல்வித்தாய் களிப்படைந்தாள் அவள் மதி நிறைந்தது மதிப்பு நீடித்தது மொட்டுக்கள் அவளுடன் சேர்ந்து மலர்ந்தன நாற்பண்புகளும் நாணி கோலம் போட்டன காதல் அவளை காதலித்தது அழகென்ற வார்த்தை அன்று அங்கீகாரம் பெற்றது உலகப் பூக்கள் அத்தனையும் தோல்வியுற்றன மாலையும் தாலியும் அவளைச் சூட போரிட்டது சுதந்திரம் அவளைContinue reading “யார் அவள்?!”
கடைசி பெஞ்ச்சுக்கு வந்த சத்திய சோதனை
குளத்தூர்பட்டி மையத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி. திங்கட்கிழமையின் உற்சாகம் பள்ளியெங்கும் மலர்ந்து கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பு அரையாண்டு தேர்வின் முதல் நாள். முதல் நாளன்று ஆங்கிலத்தேர்வு. பளிச்சென்று பள்ளிச் சீருடையுடன் பூபதி வகுப்பறைக்குள் நுழைந்தான். “டேய் மூர்த்தி! என்ன புத்தகத்தை வச்சிகிட்டு முனகிக்கிட்டே இருக்க, இன்னும் அரை மணி நேரத்துல பரிட்சை ஆரம்பிச்சிடும்.. ரெடியா?” சுருட்டை முடியில் பின்னல் போட்டுக்கொண்டே “அதான் நீ இருக்கியே! எனக்கு முன்னாடி மட்டும் உட்காரு மத்த விஷயத்த நான் பாத்துக்குறேன்” என்றான்Continue reading “கடைசி பெஞ்ச்சுக்கு வந்த சத்திய சோதனை”
ஐ லவ் யூ கமலா!
பத்து வருடங்கள் ஆயிற்று என் கமலா பாட்டி எங்கள் அனைவரையும் பிரிந்து சென்று. பண்டிகைகள், திருவிழாக்கள், முழு ஆண்டு விடுமுறை நாட்கள் என்றால் நினைவுக்கு வருவது திருச்சியில் உள்ள என் கமலா பாட்டியும் அவர் வீடும் தான். பாட்டியின் பலகாரங்களும், மிகையான அன்பும், செல்லமான கடிதலும் அவரது எல்லா பெயரக் குழந்தைகள் மனதில் இன்றும் என்றும் செழிப்பான நினைவுகளை தரக்கூடியவை. நான் விவரங்கள் அறிந்த நாள் முதல் இன்று வரை கண்ட இரும்பு மனிதர் அவர். எனக்குContinue reading “ஐ லவ் யூ கமலா!”
நுண்ணுயிரியும் நானும்
கோவிட்…இரண்டாவது அலை….. வாசிக்கும் செய்திகள், செய்தியில் காணும் காட்சிகள், நண்பர்கள், உற்றார், உறவினரின் தொலைபேசி அழைப்புகள், இவை அனைத்தையும் கேட்டு மனம் குழைகிறது. மனித வாழ்கையை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த நுண்ணுயிரி. என் மனதின் குமுறல்கள் இங்கே… நுண்ணுயிரியும் நானும் காற்றில்லை… கண்ணீர் உண்டு ! மருந்தில்லை…. மன்றாடல் உண்டு! மருத்துவப் படுக்கை இல்லை… மரணப்படுக்கை உண்டு! இயல்நிலை இல்லை…. இறுக்கம் உண்டு! அகக்கண் இல்லை… முகக்கவசம் உண்டு! இரவு நிச்சயமில்லை…. இடைவெளி உண்டு! உறவுகள்Continue reading “நுண்ணுயிரியும் நானும்”
அகப்பொருள்
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகே உள்ள சிறிய அங்காடிக்குச் சென்றிருந்தேன். பொருட்களை வாங்கி வீட்டில் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகமாக பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுத்தர வயதுள்ள ஆட்கள் கடைக்குள் துரிதத்துடன் நுழைந்தார்கள். நரைமுடிகள் கொஞ்சம் துளிர்த்த தலையுமாய், சீர்ப்படாத தாடியுமாய் இருந்தார்கள். “அண்ணா! கப் இருந்தா குடுங்க ணா.. பேப்பர் கப் , பிளாஸ்டிக் கப் ஏதோ ஒன்னு, ப்ளீஸ்..சீக்கிரம் !” என்றுContinue reading “அகப்பொருள்”
கலாச்சாரம்
பள்ளிப் பருவத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தற்பொழுது நினைவுகூர்கிறேன். குறிப்பாக எனது தொடக்கப்பள்ளியான “ லிட்டில் ஏஞ்சல்ஸ்” எனக்கு அளித்த பிறந்தநாள் நினைவுகள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை. அன்று ஐந்தாம்; ஆறாம் வகுப்பு காலங்களில் என் பிறந்தநாள் ஆவலாக துவங்கி இனிய நினைவுகளுடன் முடிவடையும். அது போன்ற ஒரு பிறந்தநாளின் நினைவுகளை உங்களுடன் பகிர்கிறேன். காலையில்.. கோரைப்பாயில் வெவ்வேறு திசைகளில் உருண்டு, போர்வையுடன் போர் செய்து, சுமையான இமைகளை திறக்க முயன்று, சோம்பல் முழுதாக நீங்குவதற்கு முன்னரேContinue reading “கலாச்சாரம்”
