தவமிருந்து பெத்த மகன் தகதகக்கும் தங்கம் அவன் அன்பா பண்பா இருந்தவன் ஊரும் உறவும் மெச்சுனவன் களம் பூரா சுத்துனதென்ன – அவன் காலு ஓடுன ஓட்டமென்ன எவன் கண்ணு பட்டுச்சோ எம்மகன் புத்தி கெட்டுச்சோ சினிமா பைத்தியம் புடிச்சுச்சு சனியன் வேலைய காட்டுச்சு கண்ணாடி பாத்தே பொழுதுபோச்சுசோக்கா திரிஞ்சே வயசும்போச்சு அப்பன ஆத்தாவ ஒதுக்குனான்- கூத்தாடி மூஞ்சிய நெஞ்சுல செதுக்குனான் கலர் படத்துல பாத்தவன கடவுள் தான்னு நம்புனான் பூச என்ன பாட்டு என்ன கோசம் என்னContinue reading “ஒப்பாரி”
Author Archives: vasanth sukumar
நிதமும் வாழ்!
நண்பனோடு நாளைக் கடத்துபகைவனிடம் தோற்று மகிழ் அம்மாவின் மடியில் அசருகடமையைச் சிறிது தவறுகடவுளிடம் கெஞ்சி நில் காலனிடம் கபடம் செய் பிஞ்சிடம் பாசாங்கு பண்ணுமழலையை மிகைப் படுத்துபொய் சொல்லி பிதற்றுவாதாடி வற்றிப் போ மண்ணிடம் மனதாற மன்றாடுதண்ணீர் எடுத்து முத்தமிடுமல்லிகைப் பிடித்து மோப்பமிடுஉலகிடம் உன்னை இழந்திடு தும்பியைத் துரத்திப் பிடிஎறும்பிடம் சாகசம் காட்டுபட்டமாய் உயரப் பறபம்பரமாய் சுற்றி விழுகிணற்றில் கனவு காண் புல்வெளி போர்த்திப் படுவெட்டியாய் வெயிலில் திரிவிடியலை மெல்ல ரசிநிலவிடம் மௌனம் துறமழையிடம் ரகசியம் சொல்மேகத்தைContinue reading “நிதமும் வாழ்!”
இயற்கை – பகுதி 2
திகட்டா வானம்தழைக்கும் தரணிதெரியா எல்லைதுதிக்கும் பறவைதுடிக்கும் சிறகுதுள்ளும் பூச்சிதவழும் பொழுது தளரா மாலைதணிந்த இரவுதணியா தழல்தூங்கா விண்மீன்துயிலும் பனிதேயா நிலவுதுணிந்த விடியல்துவளா மலர்துளிரும் கதிர்தீண்டும் தென்றல்தவிக்கும் அரும்புதீஞ்சுவை கனிதுளி தேன்தாலாட்டும் மரம்தள்ளாடும் இதழ்தடம்மாறும் ஊற்றுதிகைப்பூட்டும் மின்மினிதிசையெங்கும் வானவில்தேங்கா கானல்நீர்தொடரும் மலைதேம்பும் மேகம்திக்கிடும் மின்னல்தாளமிடும் இடிதிரண்ட காடுதெளிந்த அருவிதழுவும் சாரல்திமிரும் கடல்தாவும் அலை தாளும் புவிதீராத் தனிமைபோதும் நான் வாழ்வதற்கு!மிகை தொடரும்…வசந்த் சுகுமார்
வெட்டியான் பேச்சு
இடுகாடும் எனக்கு வீடுதேன்சவங்க என்னோட ஒறவுதேன்- நான்எம்புட்டு பொலம்பல கேட்டவன்-இந்தவெட்டியான் பொலம்பறேன் கேளுங்களேன்!“காசு மேல கொள்ள ஆச எவனுக்கு இல்லகலரு நோட்டு ஜோப்புலபொழுது ஓடும் ஜோருல -ரூவா கிழிஞ்சா ஒட்டு போடுவான்கசங்குனா கண்ணு கலங்குவான்தொலஞ்சா ஒடஞ்சு போவான்- நீ தொலச்சாஒன்ன ஒடச்சு போடுவான்வூடு வாங்க கடனுகடன தீக்க பவுனு- இப்பமவளுக்கு எங்க பொன்னு?மவனுக்கு எங்க மண்ணு?-மனுசபயலுக துட்டு இல்லாம மேயிறாக;வங்கில நின்னா வையிறாக;ஒறவ கேட்டா பசப்புறாக;-கூடசுத்துன பயலுக ஏசுறாகதட்டுல வைக்க காசு- நடுநெத்தில வைக்க காசு-பொய்ய கத்திContinue reading “வெட்டியான் பேச்சு”
தீவிரவாதியின் தீராவியாதி
பிஞ்சிலே நஞ்சு உள்ளம்- இவன்நெஞ்சிலே வஞ்ச வெள்ளம்- இவன்ஆறாம் அறிவு அழிந்தொழிய களையோடுக் கருணையும் அறுத்தெறிந்து விளையாட்டாய் வன்முறை பழகிகொலையறுக்கப் பயிற்சி பெற்று குண்டு வெடித்து மகிழ்ந்துதுப்பாக்கிப் பிடித்துத் துணிந்து இறை,இனம் பெயர் சொல்லி மதம்,மண் பெயர் சொல்லி படையொன்று இங்கு உருவாக்கினான் அடையாளம் இன்றி வலுவாக்கினான் கொள்கைத் தரும் போதை- இவனைச்செய்யத் தூண்டும் வதை புனிதம் எது? போர் எது? புனிதப்போர் இவனுக்கு நியதியானது!இவன் ஆழ்மனது கூச்சலிடும் “அன்பு என்ன தந்துவிடும்? அரவணைப்பும் ஆக்கமும் மட்டும்தீயதுContinue reading “தீவிரவாதியின் தீராவியாதி”
பொம்மலாட்டம்
சமூகம் கட்டியது நூலொன்றுசமமாய் இறுக்கியதென் கைகால்களை எகிறியும் ஏங்கியும் பார்த்தேன்!திமிறியும் துள்ளியும் சோர்ந்தேன்! அகம் மறைக்க பழகினேன் அழகு பொம்மையாய் ஆடினேன் விதம்நூறு அழகு ஆடையாம்வாழ்வொரு நாடக மேடையாம் காலம்மாற வெவ்வேறு கதாப்பாத்திரம் – நான்காலப்போக்கில் மெருகேறிய முழு எந்திரம் கைக்கொட்டி சிரித்தார் பலர்கரமிணைத்து நெகிழ்ந்தார் சிலர் மர பொம்மைக்கு இங்கேது உணர்வுமனதின் வெம்மைக்கு இல்லையிங்கு பகிர்வு! மரபுவழி கலை காத்தல் உலக நியதியோமரபிலூறும் இந்த வாழ்முறை தலை விதியோ? சற்றே நூலவிழ்த்து வேடம் கலைத்துசாகசமின்றி சாமானியனாய்Continue reading “பொம்மலாட்டம்”
The purpose of life!
A Midlife Whisper or a Million-Dollar Quest? A question that either costs a million dollars or is a mundane effect of a midlife crisis — I’m still not sure! It started echoing in my head a few years ago, around the time I noticed my first grey hairs. I dismissed it at first, called itContinue reading “The purpose of life!”
(இயற்கை-பகுதி 1)
இயற்கையின் இயக்கம் யாதென அறிய என் வாழ்நாள் போதாதென,அகத்தில் ஆரவாரமூட்டி ஆகர்ஷிக்க வைத்த இயற்கையிடம், மொழிந்து இசைத்து முத்தமிட்டு வாஞ்சை கொண்டு, புகலிடமாய் என்னை புகுத்த மிகைப்படுத்தி மன்றாடுகிறேன்! “திகட்டாத உறவுகள்” “இலைமடி அமர்ந்து எடைதனை இழந்து இன்புற பறக்கிறேன் காற்றோடு ஈரஞ் சுமந்து ஊற்றோடு நேசங் கொண்டுபெரும்பாறை ஊடுருவிசெம்மண் ஆறத்தழுவிஇலக்கின்றி போகிறேன் காகம் விரல்பிடித்து பறந்து- தேடித்தீரா தாகம் உணர்கிறேன்பறவைக் கூட்டின் நெருடலில் படர நினைக்கிறேன் குறுங்கதிர் நுனிநீர் குலுங்கிச் சிதறகுளிர்மழையில் நனைகிறேன் சுடுவெயில் கண்Continue reading “(இயற்கை-பகுதி 1)”
உணர்வேனோ?
என்னை பகுத்தறிவது எப்போது? நானின்றி உலகில்லை என்றெண்ணிய மருட்சி எதைத் தேடி போகின்றேன்?தேடும் பொருளே என்னுள் உள்ளதோ? இயக்கும் ஆட்சியும் இயங்கும் காட்சியும் ஒன்றோ? மெய்ப்பொருளோ? மெய் என்னை இத்தனை வருத்தியும் அது பொய்யென உணர மறுப்பேனோ? வெற்றி, புகழுக்கு அடிமையென பற்றியே வாழ்நாள் மெலியுமோ? நல்லறிவை கொடுத்த தெய்வம் அதை மீறும் ஆற்றலை எனக்கேன் அளித்தனையோ? கடந்தவனையும் உள்ளவனையும் என்னுள் உணரத் தவறினேன் ஆழ்ந்த பொருள் அறிய கற்ப காலம் போதுமா? பிறந்து பிறவாமையில் முடிவதுContinue reading “உணர்வேனோ?”
வீரமகளின் வீரமரணம்
பிறப்பொன்று எதற்கு இந்நாட்டில் பெண்ணாய் பிறப்பொன்று எதற்கு? கல்வி எத்தனை தந்துவிட முடியும்? கள்வனிடமிருந்து என்னை மீட்குமோ? நாற்பண்புகளையும் நல்கினாள் என் அன்னை, நற்பண்புகளை கயவனுக்கு யார் நல்குவரோ? கற்பொழுக்கம் காத்து நின்றேன் என்னை காக்குமென்று மூடராயானேனோ! வீரப் பயிற்சிகள் பெற்றேன் பெண்பிணத்தையும் தின்னும் பேடிகளிடம் போரிட்டுத் தோற்கவோ? குலதெய்வம், காவல்தெய்வம் வேண்டி விழுந்தேன், ஒரு தெய்வமும் இன்றெழவில்லையே துகிலிழந்து தவழ்ந்தேன்! கைநடுங்கி உடுக்கை தீர்ந்து கண்ணன் எதிர்நின்றான், எத்தனை திரௌபதிகளுக்கு ஆடை அளித்தானோ? பேதையையும் சிதைக்கிறான்Continue reading “வீரமகளின் வீரமரணம்”
