மரத்துப் போன மனிதம்!

வாட்ஸ்அப்பில் வாழ்த்துக்கள்- அன்பு

முகநூலில் முத்த பரிமாற்றம் – காதல்

ஆன்லைனில் அழைப்பிதழும் அனுதாபமும் – மரியாதை

டிண்டரில் டஜன் காதல் –
காவியம்

யூடியூபில் யுத்தம் – புரட்சி

ட்விட்டரில் டாம்பீகம் – பெருமை

வீடியோகாலில் வாழ்க்கை – குடும்பம்

ஸ்டேட்டஸ்ஸில் சாமி தரிசனம் – பக்தி

இன்ஸ்டாவில் இழவு தகவல் – துக்கம்

மெயிலில் மாபெரும் வெற்றி பகிர்வுகள் – மகிழ்ச்சி

கூகுளில் குறைதீர்ப்பு – பகுத்தறிவு

செல்போனில் செல்லரிக்கும் சரணடைவு – வாழ்க்கை

மரத்துப்போன மனிதம் !
மறந்தும் போன மனிதம் !!

வசந்த் சுகுமார்

Published by vasanth sukumar

Anaesthesiologist, nature lover, book lover, budding writer

Leave a comment